பிரித்தானிய பிரதமருக்கான முதல் சுற்றில் அதிக வாக்குகள் பெற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனாக்!
போரிஸ் ஜான்சன் (Boris Johnson) பதவி விலகலை தொடர்ந்து புதிய பிரதமருக்கான பதவிக்கு பல்வேறு நபர்கள் போட்டியில் இறங்கியுள்ளனர்.
இந்த சூழலில், கன்சர்வேடிவ் கட்சி தலைவர் மற்றும் பிரித்தானிய பிரதமருக்கான முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னாள் பிரித்தானிய நிதி மந்திரி ரிஷி சுனாக் (Rishi Sunak) அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த தேர்தலில் சுனாக் 88 வாக்குகளும், பென்னி மோர்டான்ட் 67 வாக்குகளும் மற்றும் டிரஸ் லிஸ் 50 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
நிதி மந்திரி நதீம் ஜகாவி மற்றும் முன்னாள் மந்திரி ஜெரேமி ஹன்ட் ஆகிய 2 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

 
இந்த போட்டியில் மற்றொரு இந்திய வம்சாவளியான அட்டர்னி ஜெனரல் சுவெல்லா பிரேவர்மென் (Suella Braverman) எம்.பி.யும் உள்ளார்.    
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        