ரஷ்யாவில் வேகமெடுத்து வரும் கொரோனா உயிரிழப்புகள்... ஒரே நாளில் இத்தனை பேர் பலியா?
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட 1,190 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
அதே வேகத்தில் உயிரிழப்புகளும் சடுதியாக உயர்ந்து வருகின்றன. மேலும் புதிதாக அங்கு 39,400 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 88,34,495-ஆக உயா்ந்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,982 பேருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி அதிகரித்து வரும் சூழலில், தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.