அவுஸ்திரேலியாவில் விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்
அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris) எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில் 14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது.
இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்த சோதனை, நாட்டின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது சோதனை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓர்பிடல் ரொக்கெட் சோதனை முயற்சி, அவுஸ்திரேலியாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.