கனடாவில் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய பிரபல தொலைதொடர்பு நிறுவனம்
கனடாவில் வாடிக்கையாளர்களிடம் பிரபல தொலைதொடர்பு நிறுவனமொன்று மன்னிப்பு கோரியுள்ளது.
கனடாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரொஜர்ஸ் நிறுவனம் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் நிறுவனத்தின் பயனர்கள் வலையமைப்பு செயலிழப்புக்களை எதிர்நோக்க நேரிட்டது.
கனடாவின் குடிவரவு திணைக்களம், கால் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இந்த வலையமைப்பு பிரச்சினை பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
தந்தி வழி மற்றும் தந்தியில்லா தொடர்பாடல் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
பயனர்களுக்கு கூடிய விரைவில் சேவையை மீள வழங்குதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
ரொஜர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மெய்யாகவே வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மன்னிப்பு கோருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.