இணையச் சேவை தடையினால் பாரியளவில் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள்
கனடாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரொஜர்ஸ் நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட பாதிப்பு, மக்களையும் வர்த்தகர்களையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இணைய சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பினால் தங்களது வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் பத்து மில்லியன் கனேடியர்கள் தொலைதொடர்பு சேவை துண்டிப்பினால் பாதிக்கப்பட்டனர்.
இணைய சேவையில் ஏற்பட்ட தடங்களினால் கடன் அட்டை உள்ளிட்ட அட்டைகளைக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்ய முடியவில்லை.
பல்வேறு நிறுவனங்களினால் கொடுப்பனவுகளை செய்யவும் வாடிக்கையாளர்களின் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.
இதனால் வியாபார நிறுவனங்கள் பெரும் நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது எவரும் பணத்தை எடுத்துச் செல்வதில்லை எனவும், அட்டைகளைக் கொண்டே கொடுக்கல் வாங்கல் செய்வதாகவும் திடீரென இணைய சேவை தடைப்பட்டதனால் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டதாகவும் வாடிக்கையாளர்களும் வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.