ஐரோப்பாவில் எல்லை மீறிய ரஷ்ய வானூர்தி; துரத்தி அடிப்பு!
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த, ரஷ்யாவினுடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஆளில்லா வானூர்தியை, ருமேனியப் போர் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
யுக்ரைன்; மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து, ஊடுருவிய ஒரு ஆளில்லா வானூர்தியை, இந்த கிழக்கு ஐரோப்பிய நாடு இடைமறித்தது இதுவே முதல் முறை என்று நாட்டின் ஜனாதிபதி நிகுசர் டான் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவும் யுக்ரைனும் தினமும் நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளை ஏவி வரும் நிலையில், குறித்த ஆளில்லா வானூர்தியை, ருமேனிய போர் வானூர்தி சுட்டு வீழ்த்தியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில்;, ருமேனியாவின் கருங்கடல் துறைமுகமான கான்ஸ்டன்டாவில் உள்ள ஒரு எண்ணெய் முனையத்திற்கு அருகில் ஒரு கடல் ஆளில்லா வானூர்தி தானாகவே வெடித்த சம்பவமும் பதிவானது.