5 பிள்ளைகளுக்கு தந்தையான பின் காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
உலகபுகழ் பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ , 5 பிள்ளைகளுக்கு தந்தையான பின் தனது காதலியை கரம் பிடிக்கவுள்ளார்.
இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார்.

2026 உலக கிண்ணத் தொடர் முடிந்ததும் திருமணம்
இரினாவுடனான ஐந்து வருடத் தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழகத் தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் மோதிரம் மாற்றும் நிச்சயம் செய்து கொண்டனர். இந்நிலையில் 2026 கால்பந்து உலக கிண்ணத் தொடர் முடிந்ததும் கிண்ணத்துடன் தனது காதலி ஜார்ஜினாவை திருமணம் செய்யவுள்ளதாக ரொனால்டோ அறிவித்துள்ளார்.