அமெரிக்காவில் 8,60,000 டொலருக்கு ஏலம் போன ரவுடியின் கைத்துப்பாக்கி
அமெரிக்காவில் பிரபல ரவுடியின் கைத்துப்பாக்கி ஓன்று 8,60,000 டொலருக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை சேர்ந்த கபோன் என்பவர் 1920ம் ஆண்டில் பிரபல ரவுடியாக இருந்துள்ளார். அந்த காலகட்டத்தில் பல குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அதில் அவர் பயன்படுத்திய கோல்ட் ரக கைதுப்பாக்கியானது அதிகபட்சமாக 8,60,000 டொலருக்கு ஏலம் போகியுள்ளது .
மேலும் அவரது ஏனைய பொருட்கள் 3 மில்லியன் டொலருக்கு ஏலம் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.