பெயரை மாற்றிய ரோயல் மெயில்!
பிரித்தானியாவில் ரோயல் மெயில் பிஎல்சி (Royal Mail PLC) அதன் பெயர் சர்வதேச விநியோக சேவைகள் பிஎல்சி (International Distributions Services) என மாற்றப்பட்டதை உறுதிசெய்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் குழுவை இரண்டாக்குவதற்கான முன்னோடியாக பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் FTSE 250 பிரிவு இந்த மாற்றம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறியது. ஜுலை மாதம் ரோயல் மெயில் அதன் GLS விநியோக பிரிவின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் என கூறியது.
ரோயல் மெயில், அதன் செயல்திறனில் ஏற்படும் மேம்பாடுகளை விரைவாக கவனிக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிக்கிறது.
அதேசமயம் ரோயல் மெயிலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என்றால், பாதுகாப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் வாரியம் பரிசீலிக்கும் என அறிவித்துள்ளது.