போர்க் கப்பல்களை பயன்படுத்தி உக்ரைனை பந்தாடும் ரஷ்யா!
ரஷ்ய - உக்ரைன் போர் நீடித்துவரும் நிலையில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அசோவ் கடல் பகுதியில் ரஷிய போர் கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் ஏழு ரஷிய கப்பல்கள் இருப்பதாகவும், கருங்கடலில் ரஷியா 21 கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உக்ரைனில் உள்ள ரஷிய படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் உறைபனி மற்றும் கடும் குளிரை சமாளிக்க அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.