ரஷ்யாவின் முக்கிய பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவம்!
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்றையதினம் ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெடி விபத்து மொஸ்கோவில் இருந்து வடகிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செர்கியேவ் போசாட் நகரில் உள்ள இராணுவத்திற்கான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 60 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெடி விபத்தால் 38 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமைடைந்துள்ளன.
இதேவேளை, உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சில ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்த நிலையில் இதனை ரஷ்ய செய்தி நிறுவனம் நிராகரித்துள்ளது.