ரஷ்யாவில் புதிதாக 968 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 23 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 968 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து ரஷ்யாவில் 1 கோடியே 3 இலட்சத்து 92 ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3இலட்சத்து 4 ஆயிரத்து 218 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 8 இலட்சத்து 28 ஆயிரத்து 31 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 37,285 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 92 இலட்சத்து 59 ஆயிரத்து 771 பேர் குணமடைந்துள்ளனர்.