ரஷ்யாவில் Covid19 பரவல் தீவரம்: புதிதாக 681 பேர் மரணம்
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 57 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 681 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் 1 கோடியே 10 இலட்சத்து 44 ஆயிரத்து 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3இலட்சத்து 25 ஆயிரத்து 433 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 7 இலட்சத்து 18 ஆயிரத்து 976 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 2 ஆயிரத்து 300 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 525 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 577 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.