விண்வெளிக்கே சென்று படப்பிடிப்பு நடத்திவரும் ரஷ்யா...அசரவைக்கும் அறிவிப்பு
உலக சினிமாவுக்கே எடுத்துக்காட்டாக விளங்குவது தான் ஹாலிவுட் திரைத்துறை.
ஏனெனில் நம் கறபனைகளுக்கு அப்பாற்பட்ட அனைத்தி விஷயங்களையும் திரையில் நிஜத்தில் நடப்பது போல காண்பிக்கும் தத்ரூபமான படைப்பாக விளங்குவது தான்.
இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் சினிமாவுக்கே சவால்விடும் வகையில் ரஷ்யா விண்வெளிக்கே சென்று திரைப்படம் எடுத்து வருகிறது. அதுவும் இந்த படத்தோடு பெயர் கூட "The Challenge" என்றே வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளியில் திரைப்படம் எடுக்கும் முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. தற்பொழுது இதன் படப்பிடிப்புக்காக படத்தின் கேமராமேன் மற்றும் நடிகை ஆகியோர் விண்வெளிக்கு பயணமாகியுள்ளனர்.
இந்த திரைப்படமானது விண்வெளிக்கு சென்ற நபரை காப்பாற்றும் பெண் மருத்துவரின் கதைதான். ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் செவ்வாய் அன்று ஒரு நடிகர், ஒரு படக்குழு உறுப்பினர் மற்றும் காஸ்மோனட் அடங்கிய ஒரு குழுவை இதற்காக விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்த தகவலை நாசா விண்வெளி ஆய்வு மையமும் பகிர்ந்துள்ளது.
மேலும் நடிகர் யூலியா,காஸ்மோனாட் ஆண்டன் ஸ்கேப்பலராவ் அடங்கிய காலமானது இந்தியா நேரப்படி இன்று மதியம் 2 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த திரைப்படமானது மொத்தம் 12 நாட்கள் விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.
இந்த விண்வெளி பயணத்திற்கான சிறப்பு பயிற்சியினை படக்குழுவினருக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் முத்த முறையாக டாம் க்ரூஸ் தான் தனது மிஷன் இம்பொசிபிள் படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ரஷ்யாக் குழு தற்போது முதல் விண்வெளி படத்தை இயக்கி வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.
Watch live as a Russian actress and film producer join cosmonaut Anton Shkaplerov on a Soyuz launch to the @Space_Station!
— NASA (@NASA) October 4, 2021
Live coverage begins Tuesday, Oct. 5 4:15 AM ET (8:15 AM UTC), continuing with docking at 7:30 AM ET (11:30 AM UTC): https://t.co/z1RgZwQkWS pic.twitter.com/nIU3JQajrO
Cosmonaut @Anton_Astrey manually guided the Soyuz MS-19 crew ship to a docking on the station's Rassvet module today at 8:22am ET. https://t.co/w4wHHqA70y
— International Space Station (@Space_Station) October 5, 2021