ஒரே நாளில் 450 உக்ரைன் ராணுவ வீரர்களை கொன்ற ரஷ்யா!
ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 450 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
இவ்வாறான நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய துருப்புக்களும் இடையே மீண்டும் பயங்கர மோதல் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உக்ரைன் படைகள் நடத்திய 12 தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும், சுமார் 450 உக்ரைன் ராணுவ வீரர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தாக்குதலில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான 2 பீரங்கிகள், 3 காலாட்படை தாக்குதல் வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.