உக்ரைனில் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ரஷ்யா! அதிபர் வேதனை
உக்ரைன் மீஇது கடந்த மே 25 ஆம் திகதி நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் டினிப்ரோ நகரின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் டின்ப்ரோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனையும், அருகே இருந்த கால்நடை மருத்துவமனையும் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறாக மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், தீய அரசாங்கத்தால் மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும் என்று உக்கரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
உக்ரைனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரத்தில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ள அவர் ஒரு தீய அரசாங்கத்தால் மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும் என்றும் இதில் இராணுவ நோக்கம் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இது சுத்தமான பயங்கரவாதம் என்றும் ரஷ்யா தனது சொந்த விருப்பத்தை தீமையின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.