புட்டினை கடுமையாக விமர்சித்த எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணம்!
ரஷ்ய நாட்டின் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறைச்சாலையில் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறைச்சாலையில் அவர் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அலெக்ஸி நவல்னி திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் என ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யமலோ-நெனெட்ஸ் மாவட்டத்தில் உள்ள சிறைத்துறை, அவரது மரணத்திற்கான காரணங்களைக் கண்டறிய முயன்று வருகிறதாகவும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.