புதிய ராணுவ தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா ; உக்ரைன் வெளியிட்ட தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை. இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
உக்ரைன் ஜனாபதி ஜெலன்ஸ்கியும், ரஷ்ய ஜனாபதி புதினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷ்யா புதிய ராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் ஜனாபதி ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷ்யா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது. புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.