உக்ரைன் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல்... 49 பேர் உயிரிழப்பு! 200 மேற்பட்டோர் காயம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று திடீர் தாக்குதல் நடத்தியதில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும், 200 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,
உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 49 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் ரஷ்யா 2 பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், இது காட்டுமிராண்டித்தனமான செயல் என தெரிவித்துள்ளது.