ரஷ்யாவின் மிக அரிதான Tor-M2DT ஏவுகணை; சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யாவின் மிக அரிதான Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தும் காணொளி வெளியாகியுள்ளது .
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 3ஆம் திகதி வெளியிடட காணொளியில், ரஷ்யாவின் Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உக்ரைனில் இராணுவ ட்ரோன்கள் மூலம் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சிகளில், ரஷ்யாவின் Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனிய படைகள் தாக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
அந்த தீயை ரஷ்ய வீரர்கள் அணைக்க முயற்சிக்கும் போது ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் அருகில் உக்ரைனிய வீரர்கள் தாக்குகையில் சில ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அதேவேளை ரஷ்யாவின் இந்த Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு போரில் உக்ரைனுக்கு முதன்முதலில் அனுப்பப்பட்ட போது, ரஷ்ய தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்பட்டது.
மேலும் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனில் தகர்க்கப்பட்டது தொடர்பான முதல் ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கை இதுவாகும்,
இது நதொடர்பில் உக்ரைன் ஆயுத கண்காணிப்பு ஆய்வாளர்கள் வெளியிட்ட குறிப்பில், இது முக்கியமாக ஆர்டிக் சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.