ரஷ்யா- உக்ரைன் போர்; மனதை உருக்கும் சிறுமியின் வாய்ஸ் மெசேஜ்
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) கடந்த மாதம் 24ஆம் திகதி தொடங்கிய பிறகு, அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.
இதன்படி புடின் கூறுகையில், “ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தொடர்பாக வெளியில் இருந்து யார் தலையிட முயற்சி செய்தாலும், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வரலாற்றில் இதுவரையில் நீங்கள் பார்த்திராத அளவுக்கு அது மோசமானதாக இருக்கும். அனைத்து முடிவுகளும் இதற்கு தகுந்தாற் போலவே எடுக்கப்படுகின்றன.
நீங்கள் என் பேச்சை கேட்பீர்கள் நன நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். புடினின் பேச்சு என்பது போர் இன்னும் உக்கிரம் அடைவதற்கான ஆதாரமாக அமைந்தது.
இதையடுத்து போர் நிறுத்தம் நடைபெற வேண்டும் என இரு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து, சமூக வலைதளங்களில் எண்ணற்ற பொதுமக்கள் உலகெங்கிலும் இருந்து குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, உக்ரைனில் உள்ள அப்பாவி மக்கள் அமைதியுடனும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று பலர் பிரார்த்திக்கின்றனர்.
https://www.instagram.com/p/Caaf6Smju5X/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
சிறுமி ஒருவர் இதுபோல வாய்ஸ் கொடுத்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கானோரை சென்றடைந்து வருகிறது. காண்பவர்களின் கண்களில் கண்ணீர் வரச் செய்வதாக, மனதை உருகச் செய்வதாக அந்த வீடியோ கிளிப் அமைந்துள்ளது.
அந்த வீடியோவில் லில்லி என்னும் சிறுமி பேசுகிறார். “நான் பூமியில் அமைதியை (peace) விரும்புகிறேன். ஆனால் பூமி உடைந்து (pieces) போகுவதை விரும்பவில்லை. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள்’’ என்று கூறியுள்ளார்.
வீடியோவின் இறுதியில் போரை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சின்னஞ்சிறு சிறுமியிடம் இருந்து மிக வலுவான கோரிக்கை வந்திருப்பது குறித்து நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, உக்ரேனில் உள்ள மக்கள், தங்களுக்காக வெளிநாட்டு மக்கள் குரல் கொடுப்பது ஆறுதலாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். சிறு வயதிலேயே உலக அமைதிக்கு குரல் கொடுத்து வரும் சிறுமியின் முயற்சி பாராட்டுக்கு உரியது என்று நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே, போரில் ரஷ்ய படைகள் ஒருபக்கம் முன்னேறிக் கொண்டிருந்தாலும், அவர்களது தரப்பில் உயிர் சேதமும் ஏற்படுகிறது. இது வரையிலும் ரஷ்ய படையினர் 500 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 1,600 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் தரப்பில் ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை குறித்து தகவல் வெளியிடவில்லை. ஆனால், பொதுமக்கள் 2,000 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.