அவ்வளவு பெரிய ரஷ்யா போதவில்லையா உங்களுக்கு? ஆதங்கத்தை வெளியிட்ட மூதாட்டி
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் குறித்த தாக்குதலில் வீட்டை இழந்த மூதாட்டி ஒருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் போரில் தனது வீடு இடிந்து தரைமட்டமாகியிருப்பதைப் பார்த்த கோபத்தில், உக்ரைனின் பக்முட் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், அவ்வளவு பெரிய ரஷ்யா உங்களுக்குப் போதவில்லையா என்று அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் கடவுளிடம் கேட்கிறேன். அவர்களுக்கு என்னதான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷ்யா அவர்களுக்குப் போதவில்லையா என்ன? ஏன் இப்படி மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்? என்றும் கூறினார்.
இந்த தாக்குதலில் மரியாவின் வீடு மட்டுமல்ல, அவரது அக்கம் பக்கம் வீடுகளும் தரைமட்டமாகியுள்ளன.