யுக்ரைனில் ரஷ்ய தாக்குதல் ; இரு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் பலி
யுக்ரைன் மீதான தீவிர ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் போது இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலின்போது யுக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ஒரு மழலையர் பாடசாலை தாக்கப்பட்டது.
அத்துடன் கியேவில் பரவலான சேதங்கள் ஏற்பட்டன.
இந்தநிலையில், காயமடைந்த 27 பேரில் சிறுவர்களும் அடங்குகின்றனர்.
ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் புடாபெஸ்டில் நடைபெறவிருந்த உச்சி மாநாடு, வீணான சந்திப்பை" விரும்பாததால் ஒத்திவைக்கப்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணித்தியாலங்களிலேயே இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
இந்தநிலையில், டிரம்ப்-புடின் உச்சிமாநாட்டிற்கான தயாரிப்பு தொடர்வதாக ரஷ்ய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அந்த சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறியிருப்பதை அவர்கள் மறுத்துள்ளனர்