ஏப்ரல் இறுதிக்குள் திரும்பாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
மே 1 அன்று ரஷ்ய சந்தையில் நுழையாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 ஆண்டு தடை விதிக்க ரஷ்ய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைவர் ரெஷெட்னிகோவ் அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து, பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி முதலீடு மற்றும் சேவைகளை துண்டித்துள்ளன.
இதன் விளைவாக, ரஷ்யாவில் ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் எதிர்காலத்தை அறியாமல், வேலையின்றி தவித்தனர்.
ரஷ்யாவை விட்டு வெளியேறும் நிறுவனங்கள், மே 1ம் திகதி மீண்டும் செயல்படத் தொடங்காத பட்சத்தில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் செயல்பட தடை விதிக்க முடிவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.