உக்ரைன் பாதுகாப்பு சேவை தலைமையகத்தை தாக்கிய ரஷ்ய ட்ரோன்
கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன்ஸ்கா பிரவ்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள குறைந்தது இரண்டு ஜன்னல்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது போல தெரிந்தது, அதே நேரத்தில் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

நகர மையத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார்.
சமீபத்திய வாரங்களில் ரஷியா, உக்ரைன் மீதான தனது பகல் நேர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
சில சமயங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க கடினமான ஜெட் விமானங்களையும் அது பயன்படுத்துகிறது.
தாக்குதலுக்கு பிறகு "SBU-வின் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடுடன்" பேசியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
"துரதிர்ஷ்டவசமாக, கீவ் நகரின் வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே உள்ள SBU-வின் மைய கட்டிடத்தின் மீது ஒரு ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது," என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.