புத்தாண்டில் புடினின் உத்தரவால் சோகத்தில் மூழ்கிய ரஷ்ய மக்கள்
புத்தாண்டின் நள்ளிரவில் வாணவேடிக்கைகளை வெடிக்க செய்வதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடை விதித்துள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், ட்ரோன் தாக்குதல்கள் மீது அச்சத்திலேயே அவர் இந்த உத்தரவினை விடுத்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆண்டு தோறும், புத்தாண்டை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு அருகே முன்னெடுக்கப்படும் வாணவேடிக்கைகள் (pyrotechnics) மற்றும் புனித பசில் பேராலய வளாகத்தில் நடத்தப்படும் வாணவேடிக்கைகள் உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளாகும்.
இருப்பினும், 2025ஆம் ஆண்டு, உல்லாசப் பயணிகளின் வருகைக்கு செஞ்சதுக்கம் பல மணிநேரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமாத்திரமன்றி, ரஷ்யாவின் 11 நேர மண்டலங்களில் பல முக்கிய நகரங்களிலும் நள்ளிரவு கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்நாட்டு அதிகாரி ஒருவர், மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் நள்ளிரவு வாணவேடிக்கைகள் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், போரினால் காயமடைந்தவர்கள் வாணவேடிக்கைகளால் எழும் சத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இதன் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வாணவேடிக்கை மறைவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.