அனுமதியின்றி கனடாவில் தரையிறங்கிய ரஷ்ய விமானம்; கனடா அரசு அதிரடி நடவடிக்கை
மிகப் பெரிய ரஷ்ய விமானம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் வெளியேறவும் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்ய விமானங்களுக்கு கனடா அரசாங்கம் தடை விதித்தது.
இந்த நிலையில், ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கடந்த பிப்ரவரி 27ம் திகதி ரொறன்ரோவில் அதிரடியாக தரையிறக்கப்பட்டது.
ஏங்கரேஜ் மற்றும் ரஷ்யா வழியாக சீனாவில் இருந்து கனடா வந்த அந்த சரக்கு விமானமானது ரொறன்ரோவில் தரையிறங்கிய சில மணி நேரத்தில் புறப்பட தயாரான நிலையில், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் தடையும் விதிக்கப்பட்டது.
இதன்படி குறித்த தகவலை கனடா போக்குவரத்தும் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யா தொடர்புடைய ஒரே ஒரு விமானம் மட்டுமே தற்போது ரொறன்ரோவில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் கனடா போக்குவரத்து குறிப்பிட்டுள்ளது.
ஆனால், கனடா போக்குவரத்து நிர்வாகம் குறித்த விமானத்தை சிறைபிடிக்கவில்லை எனவும், உரிய அனுமதி பெறாததாலையே வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் கனடா போக்குவரத்து விளக்கமளித்துள்ளது.