உக்ரைன் கொடியை உயர்த்தியதற்கு ரஷ்ய பதிலடி!
உக்ரைனுடன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் எங்களுடன் போரிட வேண்டும் என்பதையே விரும்புகின்றன எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) குற்றம்சாட்டி உள்ளார்.
போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு காலம் எங்களுடன் ஒப்பந்தம் செய்வதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் புடின்(Vladimir Putin) குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் உக்ரைன் கொடியை உயர்த்தியது, தனது நாடு உடைந்துவிடாது என்பதற்கான அறிகுறி ஆகும் என ஜெலன்ஸ்கி(Zelensky) குறிப்பிட்டார்.
உக்ரைன் படைகள் பாம்பு தீவில் தங்கள் கொடியை உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு ரஷ்ய போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.