உக்ரைன் சிறுமிகளை முத்திரை குத்திக் கொல்லும் ரஷ்ய வீரர்கள்!
ரஷ்ய வீரர்கள் சிறுமிகளை தகாத முறையில் ஈடுபடுத்தி, அவர்களின் உடல்களில் முத்திரை குத்தியுள்ளனர் என உக்ரைன் பெண் எம்.பி குற்றஞ்சாட்டி உள்ளார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் திகதி ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியது. வான்வெளி, தரைவழி கடல்வழி என பலமுனைகளில் தனது தாக்குதலை உக்கிரமாக நடத்தி வருகிறது.
இந்த போர் ஆரம்பித்து 6 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பெண் எம்.பி. லெசியா வாசிலென்க்(Lesia Vasilenk), தனது டுவிட்டரில், ரஷ்ய வீரர்கள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததாகவும், பெண்களின் உடலில் முத்திரை குத்துவதாகவும் கூறி உள்ளார்.
ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் மக்களை கொள்ளையடித்து, கற்பழித்து, கொன்று வருகின்றனர்.ரஷ்யாவை "ஒழுக்கமற்ற குற்றங்களின் தேசம்" என்றும் லெசியா வாசிலென்க் (Lesia Vasilenk) கூறி உள்ளார்.
இந்நிலையில் கொக்கி சிலுவை வடிவில் ஸ்வஸ்திகா(Swastika) சின்ன தீக்காயங்கள் 10 வயது சிறுமிகள் உடல்களில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிறுமிகளின் உறுப்புகள் மற்றும் மலக்குடல் பாதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய ஆண்கள் இதைச் செய்தார்கள். ரஷ்ய தாய்மார்கள் அவர்களை வளர்த்தனர்.
Tortured body of a raped and killed woman. I’m speechless. My@mind is paralyzed with anger and fear and hatred. #StopGenocide #StopPutinNOW pic.twitter.com/Kl0ufDigJi
— Lesia Vasylenko (@lesiavasylenko) April 3, 2022
ஒழுக்கக்கேடான குற்றவாளிகளின் தேசம் அது என கூறினார். மேலும் "தகாத முறையில் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் சித்திரவதை செய்யப்பட்ட உடல்" என்று அவர் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.
நான் மவுனமாக இருக்கிறேன். என் மனம் கோபத்தாலும் பயத்தாலும் வெறுப்பாலும் செயலிழந்துவிட்டது என கூறி உள்ளார்.