மூன்று ஆண்டுகள் பின் கடற்கரைக்கு வந்த ரஷ்ய உளவு திமிங்கலம்! பரபரப்பு

Norway Russian Federation Sweden
By Shankar May 30, 2023 07:35 PM GMT
Report

மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஸ்வீடன் கடற்கரையினில் மேற்பரப்புக்கு ரஷ்ய 'உளவு' திமிங்கலம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நோர்வே கடற்கரையில் கணப்பட்டு தலைப்புச் செய்திகளில் வந்த திமிங்கலம், இப்போது 3 ஆண்டுகளுக்கும் பின்னர் ஸ்வீடன் கடற்கரையில் சுற்றித்திரிவதாக அச்சம் எழுந்துள்ளது.

மூன்று ஆண்டுகள் பின் கடற்கரைக்கு வந்த ரஷ்ய உளவு திமிங்கலம்! பரபரப்பு | Russian Spy Whale Came Beach After Three Years

ரஷ்ய கடற்படையால் பயிற்சி பெற்ற உளவாளி என்று சந்தேகிக்கப்படும் பெலுகா திமிங்கலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-05-2023) ஸ்வீடன் கடற்கரையில் தோன்றியதாக கூறப்படுகிறது.

திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கண்ட கடல் உயிரியலாளர்கள் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் ஸ்வீடனின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஹன்னெபோஸ்ட்ராண்டில் அந்தத் திமிங்கலம் சுற்றித் திரிவதைக் கடல் உயிரியலாளர்கள் கண்டுள்ளனர். அனால் அது வேகமாக சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

மூன்று ஆண்டுகள் பின் கடற்கரைக்கு வந்த ரஷ்ய உளவு திமிங்கலம்! பரபரப்பு | Russian Spy Whale Came Beach After Three Years

"அது ஏன் இப்போது அவ்வளவு வேகமாகச் சென்றார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும், அது ஹார்மோன் மாற்றத்தல் ஒரு துணையை தேடிக்கொண்டிருக்கலாம் அல்லது தனிமையாக இருக்கலாம்.

ஏனெனில் பெலுகாக்கள் சமூகமாக வாழும் இனம் - அது மற்ற பெலுகா திமிங்கலங்களைத் தேடிக்கொண்டிருக்கலாம்"என OneWhale அமைப்பின் கடல் உயிரியலாளர் செபாஸ்டியன் ஸ்ட்ராண்ட் கூறினார்.

மூன்று ஆண்டுகள் பின் கடற்கரைக்கு வந்த ரஷ்ய உளவு திமிங்கலம்! பரபரப்பு | Russian Spy Whale Came Beach After Three Years

குறிப்பாக 13-14 வயதுடையதாக நம்பப்படும் இந்தத் திமிங்கலம், அதிகபட்ச ஹார்மோன் சுரக்கும் வயதில் உள்ளது என கூறுகின்றனர்.

ஆனால், இந்தத் திமிங்கலம் நோர்வேக்கு வந்ததிலிருந்து வேறு ஒரு பெலுகாவைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

"ஹ்வால்டிமிர்" என்ற புனைப்பெயர் கொடுக்கப்பட்ட இந்த திமிங்கலம், முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அதில் ஆக்ஷன் கமெரா பொறுத்தக்கூடிய மவுண்ட் உள்ள சேணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மவுண்ட்டின் பிளாஸ்டிக் கிளாஸ்ப்களில் Equipment St Petersburg என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்ததால், இந்த திமிங்கலம் ஒரு ரஷ்ய உளவாளி என சந்தேகிக்கப்படுகிறது.

ஆனால், திமிங்கலத்தை ரஷ்ய உளவாளியாக பயன்படுத்துவதாக மாஸ்கோ ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம், வெளிவரும் செய்திகளுக்கு எந்த அதிகாரப்பூர்வ எதிர்வினையையும் வெளியிடவில்லை.

பெலுகா திமிங்கலங்கள் 40 முதல் 60 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை, சுமார் ஆறு மீட்டர் அளவை எட்டும். அவை பொதுவாக கிரீன்லாந்து, வடக்கு நோர்வே மற்றும் ரஷ்யாவைச் சுற்றியுள்ள பனிக்கட்டி நீரில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US