மரியுபோலை கொள்ளையடித்த ரஷ்ய துருப்புக்கள்; நகர சபை விடுத்த சபதம்
உக்ரைனின் மரியுபோல் அருங்காட்சியகங்கள் குண்டுவீச்சு மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் காலியாக நிற்கின்றன என்று மரியுபோல் நகர சபை கூறுகிறது.
இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படைகள் கொள்ளையடித்ததைப் போலவே ரஷ்ய வீரர்கள் நகரின் அருங்காட்சியகங்களிலிருந்து அனைத்து மதிப்புமிக்க பொருட்களையும் எடுத்துச் சென்றதாக மரியுபோல் நகர சபை கூறுகிறது.
டெலிகிராமில் வெளியான ஒரு அறிக்கையில், உள்ளூர் வரலாறு மற்றும் கலை அருங்காட்சியகங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், நிறுவனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறியது.
அதேசமயம் இதற்காக , ரஷ்யப் படைகள் தண்டிக்கப்படும் என்றும், அனைத்தும் விடுவிக்கப்பட்ட மரியுபோலுக்குத் திருப்பித் தரப்படும் என்றும் மரியுபோல் நகர சபை சபதம் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.