சந்திரனில் மோதி வெடித்து சிதறிய ரஷ்யாவின் விண்கலம்
ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் ஆளில்லா விண்கலம் இதுவாகும். ஆனால் இது தரையிறங்குவதற்கு சுற்றுப்பாதையில் சென்ற நிலையில் கட்டுபாட்டை இழந்துள்ளது.
சந்திரனின் ஒரு பகுதியை ஆராய்வதற்காக கடந்த (11.08.2023) ஆம் திகதி ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் (Vostochny Cosmodrome) இல் இருந்து லூனா-25; விண்ணிற்கு அனுப்பட்டிருந்தது.
47 ஆண்டுகளுக்கு பின்னர் ரஷ்யா விண்கலம் ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ரஷ்யாவின் மாநில விண்வெளி நிறுவனமான Roscosmosலூனா -25 உடனான தொடர்பு நேற்று மாலை முதல் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை சந்திரயான்-3 விண்கலம் அடுத்த வாரம் தரையிறங்கவுள்ள இந்தியாவுக்கு எதிராக நிலவின் தென் துருவத்தை நோக்கி ரஷ்யாவின் லூனா -25 ஏவப்பட்டது.
நிலவில் விலை மதிப்பற்ற கனிமங்கள் மற்றும் உறைந்த நீர் என்பன இருப்பதனை உறுதி செய்வதற்காகவே நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக களமிறக்கப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 தோல்வியடைந்துள்ளது.