கனேடிய மாகாணம் ஒன்றை நடுங்க வைத்த சம்பவத்தில் ஒருவருகே தொடர்பு: அதிகாரிகள் உறுதி
கனடாவின் Saskatchewan மாகாணத்தில் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்ட 11 பேர்கள் தொடர்பில் ஒருவருக்கு மட்டுமே பொறுப்பு என விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Saskatchewan மாகாணத்தின் ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் பகுதிகளில் கடந்த மாதம் நடந்த கொலை சம்பவங்களுக்கு Damien Sanderson என்பவரே பொறுப்பு என நம்பியிருந்த நிலையில், தற்போது இவரை கொலை செய்த, இவரது சகோதரர் Myles Sanderson தான் உண்மையான பொறுப்பு என பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
Myles Sanderson இந்த கொலைகள் அனைத்தையும் தனியொருவராகவே முன்னெடுத்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். செப்டம்பர் 4ம் திகதி நடந்த இந்த பகீர் சம்பவத்தில் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் Damien மீது பதியப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் அவரும் அவர் சகோதரரும் மரணமடைந்துள்ள நிலையில் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், செப்டம்பர் 4 அன்று நடந்த தாக்குதல்களுக்கான ஆரம்ப திட்டமிடல் மற்றும் தயாரிப்பில் டேமியன் ஈடுபட்டிருந்ததாக ஆதாரங்கள் தெரிவிப்பதாக பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்க இருப்பதாக மாகாண பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 4 அன்று நடந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 18 பேர்கள் காயங்கலுடன் உயிர் தப்பினர்.
செப்டம்பர் 5ம் திகதி டேமியன் சடலமாக மீட்கப்பட்டார். செப்டம்பர் 7ம் திகதி பொலிஸ் காவலில் Myles Sanderson மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.