கனடாவில் சிறையிலிருந்து விடுதலையான அதே நாளில் கைதான நபர்
கனடாவின் சஸ்கடூன் நகரைச் சேர்ந்த நபர் ஓருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதே நாளில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒளிந்துப் படம் பிடித்தல் உள்ளிட்ட குற்றங்களில் நீண்ட வரலாறு கொண்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைல் ரொனால்ட் ஹேமலக் என அடையாளம் காணப்பட்ட இவர், ஒளிந்துப் பார்வையிடுதல், தகாத செயல்கள் மற்றும் இரவு நேரத்தில் சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட மொத்தம் 70 குற்றங்களில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பெப்ரவரி 14ஆம் திகதி சஸ்காடூன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடும் என்ற அச்சத்தால், விடுதலையற்கு முன்பே பொலிஸார் பொது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
ஹேமலக் அதே மாலை முதலாம் அவன்யூ இன் 200-ஆம் பகுதி அருகே கைது செய்யப்பட்டார்.
விடுதலை விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹேமலக் 2017 மற்றும் 2020 ஆண்டுகளில் ஒளிந்துப் படம் பிடித்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டிருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு இறுதியில் 23 ஒளிந்துப் படம் பிடித்த குற்றங்களுக்கும், இரண்டு பரோல் விதிமுறை மீறல் குற்றங்களுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்திற்கு வழங்கப்பட்ட குறைப்பின் காரணமாக, அவருக்கு சுமார் ஏழு மாதங்கள் மட்டுமே மீதமிருந்தது.
ஒளிந்துப் படம் பிடித்த குற்றத்திற்காக வழங்கப்பட்ட தண்டனைகளில் இது நீண்டகால தண்டனைகளில் ஒன்றாகும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹேமலக் நாளைய தினம் சஷ்காடூன் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.