இஸ்ரேல் விமானங்களுக்கு அனுமதி அளித்த சவுதி அரேபியா!
இஸ்ரேல் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றபின் முதல் முறையாக ஜோ பைடன் (Joe Biden) மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் முதல் நாடாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த 6-ம் திகதி இஸ்ரேல் வந்தடைந்தார்.
இஸ்ரேலில் 3 நாள் பயணத்தை முடித்து பைடன் நேற்று சவுதி அரேபியா புறப்பட்டார். சவுதி அரேபியாவின் ஜீடா நகருக்கு பைடன் வந்தடைந்தார். அவருக்கு அரசுமுறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்தித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், இஸ்ரேலின் விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் - சவுதி இடையேயான உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.