வெளிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலை நீக்கிய சவூதி

Sulokshi
Report this article
கொரோனா தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை நீக்குவதாக சவூதி அரேபியா ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சவூதி அரேபியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையகம் (GACA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எந்தவொரு நாட்டிலும் சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றின் முழு அளவைப் பெற்றுக் கொண்டவர்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அதிகாரப்பூர்வ தடுப்பூசி சான்றிதழை வழங்கினால், கட்டாய தனிமைப்படுத்தல் இல்லாமல் இராச்சியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சவூதி குடிமக்கள் அல்லாத மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்படாத பயணிகள், நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பூசி பெறாதவர்கள் 8 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் நாட்டுக்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னதாக பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை, விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த புதிய நடைமுறைகள் இம்மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது. சவூதி குடிமக்கள் அல்லாத மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்படாத குழுக்கள் ஏழு நாட்களுக்கு ஒரு நிறுவன தனிமைப்படுத்தலின் நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள், ஆறாவது நாளில் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாதவர்களை சுற்றுலா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிடங்கள் மற்றும் தங்குமிட வசதிகளுடன் ஒப்பந்தம் செய்ய விமான சேவைகளை சவூதி அரேபியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையகத்தின் தலைமை ஆணையகம் கட்டாயப்படுத்தியது.
இதேவேளை ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சவூதி அரேபியா 433,094 கொரோனா தொற்றாளர்களையும், 7,162 உயிரிழப்புகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.