ஓராண்டுக்குப் பிறகு வெளிநாடுகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி அளித்த நாடு!
வெளிநாடுகளுக்கு செல்ல நாட்டு மக்களுக்கு ஓராண்டுக்குப் பின் அனுமதி அளித்துள்ளது சவுதி அரசாங்கம்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட சவுதி அரேபியா குடிமக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள ஓராண்டுக்குப் பின்னா் திங்கள்கிழமை அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சவுதி அரேபிய குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்நாடு தடை விதித்திருந்தது. கடந்த ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து அமலில் இருந்த இந்தத் தடையால், வெளிநாடுகளில் பயின்று வரும் சவுதி அரேபிய மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
அதே வேளையில், 3 கோடி மக்கள்தொகை கொண்ட சவுதி யில் சுமாா் 1.1 கோடி பேருக்கு குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுவிட்டது. இதைத் தொடா்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அந்நாடு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கரோனாவிலிருந்து அண்மையில் மீண்டவா்கள், 18 வயதுக்குள்பட்டவா்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவா்.
இதையடுத்து, சவுதி யின் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான சவுதி யா 43 சா்வதேச இடங்கள் உள்பட 71 இடங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளது.