துணை ஜனாதிபதி Saulos Chilima இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதம்; நால்வர் உயிரிழப்பு
விமான விபத்தில் உயிரிழந்த மலாவியின் மறைந்த துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவின் (Saulos Chilima) இறுதி ஊர்வலத்தின் மீது வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று மோதியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள்ளதாக கூறப்படுகின்றது.
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் தலைநகர் லிலாங்வேக்கு தெற்கே 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சிலிமாவின் சொந்த கிராமமான என்சிபே வழியாக அவரது உடல் நேற்றைய தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) உள்ளிட்ட 9 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.