ஸ்காப்ரோ மலைத் தொடரில் சிக்கிக் கொண்ட பெண்கள்! பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!
ஸ்காப்ரோவில் செங்குத்து மலைத் தொடர் ஒன்றில் சிக்கிக் கொண்ட இரண்டு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
றொரன்டோ தீயனைப்புப் படையினர் குறித்த இரண்டு பெண்களையும் மீட்டுள்ளனர். செங்குத்தான மலையொன்றின் உச்சி விளிம்பில் சிக்கித் தவித்த பெண்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
கயிறுகளின் உதவியுடன் இரண்டு பெண்களையும் தீயனைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
மழையுடனான சீரற்ற காலநிலையினால் இந்தப் பெண்கள் மலை உச்சியில் சிக்கிக் கொண்டதாகவும், நடப்பதன் மூலம் ஏற்படக்கூடிய அபத்து தவிர்ப்பதற்காக மலை உச்சியின் விளிம்பில் இவர்கள் நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட கருவிகள் மற்றும் பயிற்றப்பட்ட படைவீரர்களின் ஒத்துழைப்புடன் தீயனைப்பு படையினர் இரண்டு பெண்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மலையில் சிக்கிய பெண்கள் இருவரும் எவ்வித காயங்களும் இன்றி மீட்கப்பட்டதாக தீயனைப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
மலையேறிக் கொண்டிருந்த போது இந்த இரண்டு பெண்களும் விபத்தில் சிக்கியுள்ளனர் என விசாரணகைளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறான ஆபத்தான மலைகளில் ஏறுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.