கனடாவில் முகநூலில் ஊடாக மோசடி செய்த நபர் கைது
கனடாவில் முகநூலில் ஊடாக மோசடியில் ஈடுபட முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஸ்கார்பரோவைச் சேர்ந்த ஒரு நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
20 வயதான நிக்கோலஸ் ருனிஸ் (Nicholas Runice) என்பவர் கடந்த நவம்பர் 2024ல் முகநூலில் வெளியான ஒரு நகை விற்பனை விளம்பரத்தைப் பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்னர், ஓஷாவாவில் ஹில்கிராஃப்ட் வீதி (Hillcroft Street) மற்றும் ரிட்சன் வீதி (Ritson Road South) அருகே விற்பனையாளரை சந்திக்க முயற்சித்துள்ளார்.
சந்திப்பு நடைபெறும் போது, ருனிஸ் விற்பனையாளரின் நகைகளை பிடித்து ஓட முயன்றதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் சந்தேகத்திற்குரிய நபரை துரத்தி, நகைகளை மீட்டுள்ளார்.
ஆனால், சந்தேகநபர் கத்தியை காண்பித்து மிரட்டி பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னர் தப்பிச் சென்றுள்ளார்," என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 7ம் திகதி, 2025 அன்று, போலீசார் ருனிசை கண்காணித்து கைது செய்தனர்.
இந்த சந்தேக நபரிடம் எவரேனும் பணத்தையோ அல்லது பொருட்களையோ பறிகொடுத்திருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.