கனடாவில் காணாமல் போன சிறுவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்
கனடாவில் காணாமல் போன சிறுவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நோவா ஸ்கோஷியாவில் ஆறுவயது லில்லி மற்றும் நான்குவயது ஜாக் சுலிவன் ஆகிய இருவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அவர்களை தேடும் முயற்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தன.
சனிக்கிழமையன்று தேடுதல் குழுக்கள் புதிதாக பல பகுதிகளில் தேடினாலும், எந்த புதிய தகவல்களும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் தேடுதலில் 115 சிறப்புப்படை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். மீட்புப் பணிகளுக்கு சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், விடுமுறை நாட்களிலேயே ட்ரோன்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறுவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.