வாஷிங்டன் – வான்கூவர் தீவுக்கிடையிலுள்ள கடலில் மாயமான படகு
வாஷிங்டன் மாநிலத்திலும் கனடாவின் வான்கூவர் தீவுக்கிடையிலுள்ள கடற்பரப்பில் படகு ஒன்று மாயமாகியுள்ளது.
இந்த படகில் பயணம் செய்த மூன்று படகு பயணிகளில் ஒருவரான 64 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள இருவருக்கான தேடுதல் நடவடிக்கையை அமெரிக்கக் கடற்படை நிறுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, 63 வயது ஆணும், 69 வயது ஆணும் இன்னும் காணாமல் உள்ளனர்.
இவர்கள் மூவரும், வாஷிங்டன் மாநிலத்தின் ஸ்னோஹோமிஷ் கவுண்டியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
விரிவான தேடுதல் நடவடிக்கையின் பின்னர், வியாழக்கிழமை பிற்பகலில் படகு கடற்கரையில் கவிழ்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், அதில் பயணித்தவர்கள் எவரும் காணப்படவில்லை.