கனடாவில் சிறையிலிருந்து தப்பிய கைதி குறித்து வெளியான அறிவிப்பு
கனடாவின் நியூ பிரான்ஸ்விக் மாநிலத்தில் உள்ள சிறையொன்றிலிருந்து ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார் இந்தக் கைதி ஓர் ஆபத்தானவர் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
35 வயதான டாட் ஜான் லூயிஸ் (Todd John Lewis), கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சிறை வளையத்தைத் தாண்டி ஓடிவிட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதியின் விவரங்கள்:
• உயரம்: சுமார் 5 அடி 7 அங்குலம்
• எடை: சுமார் 146 பவுண்ட்
• முடி: வெளிர் தங்கம்
• கண்கள்: நீலம்
• அணிந்து கொண்டிருந்தது:நீலப் பேண்ட், பழுப்பு கோட், கருப்பு பொன்னெட்
குறித்த கைதி மொன்ட்கோன் பகுதியில் இருக்கக்கூடும் என் பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கைதி ஆபத்தானவர் எனவும் அவரை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.