வேற்று கிரகவாசிகள் தொடர்பிலான இரகசிய கோப்புகள் ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
அமெரிக்காவிடம் பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் குறித்து ரகசிய கோப்புகள் இருக்கும்சூழலில், அதைப் பொதுமக்களின் பாா்வைக்கு வெளியிடப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இவ்விவகாரம் மிகவும் சுவாரஸ்யமானது; இதில் பொதுமக்களுக்கு மிகுந்த ஆா்வம் இருப்பதால், வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களைப் பகிர பாதுகாப்புத் துறை மற்றும் இதர அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட இருக்கிறேன்.

முன்னாள் அதிபா் ஒபாமா, வேற்று கிரகவாசிகள் குறித்து தவறான முறையில் பொதுவெளியில் தகவல்களைக் கசியவிட்டாா். இது விதிகளுக்கு எதிரானது’ என்றாா்.
அண்மையில், நோ்காணல் ஒன்றில் பேசிய ஒபாமா, ‘வேற்று கிரகவாசிகள் உண்மையானவா்கள்’ என்றாா். பின்னா், ‘வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் பாா்த்ததில்லை’ என்று விளக்கமளித்தாா்