ரகசிய கொலை ; காட்டிக் கொடுத்த கூகிள் மேப்; சிக்கிய நபர்கள் !
உலகம் முழுவதும் வழிகாட்டியாக கூகிள் மேப் செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியான கூகிள் மேப் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியையே கண்டுபிடிக்க உதவியுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.
ஸ்பெயினில் ஒரு நபரை ரகசியமாக கொலை செய்து அப்புறப்படுத்திய நிலையில், அதை கூகிள் மேப்பில் பார்த்து கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நபரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி
க்யூபாவை சேர்ந்த நபர் ஒருவர் ஸ்பெயின் நாட்டின் சோரியா பகுதியில் வசித்து வந்துள்ளார். அவருடன் ஒரு பெண்ணும் வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அந்த நபர் மாயமானார். அவர் மாயமாகும் முன் , அவரது உறவினர் ஒருவரது எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வேறு ஒரு பெண்ணுடன் இந்த நாட்டை விட்டு செல்வதாக அந்நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக உறவினர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். எனினும் கடந்த ஓராண்டாக காணாமல் போன அந்த நபர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில்தான் கூகிள் மேப்பில் ஸ்ட்ரீட் வியூவில் பார்த்தபோது மாயமான நபர் வீட்டருகே ஒருவரை கொன்று காரில் ஏற்றும் படம் இடம்பெற்றுள்ளது. அதன்மூலமாக அவரை கொலை செய்தது அவரது மனைவியும், 2 நபர்களும் என தெரிய வந்தது.
அவரை கொலை செய்து அவர்கள் காரில் ஏற்றும்போது அந்த பக்கமாக கூகிள் ஸ்ட்ரீட் வியூக்காக போட்டோ எடுத்தபடி சென்ற வாகனம் அந்த சம்பவத்தையும் படம் எடுத்துள்ளது. அது கூகிள் ஸ்ட்ரீட் வியூவில் தெரிய வந்ததால் கொலை செய்தநபர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.