கனடாவில் தேசியப் பாதுகாப்பு துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து ஆய்வு
கனடாவின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறித்துப் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மறுஆய்வு நிறுவனம் விரிவான ஆய்வை ஆரம்பித்துள்ளது.
இந்த ஆய்வு தொடர்பாக முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு பொறுப்பு கொண்ட அரச அமைப்புகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறைகள் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு வரையறைக்கின்றன, பயன்படுத்துகின்றன மற்றும் அதன் பயன்பாட்டை எவ்வாறு கண்காணிக்கின்றன என்பதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும்.

கனடாவின் பாதுகாப்பு அமைப்புகள் தற்போது, ஆவணங்களை மொழிபெயர்த்தல், சைபர் தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் மால்வேர் அச்சுறுத்தல்களை கண்டறிதல், போன்ற பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகின்றன.
தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் தொடர்பான சுயாதீன ஆய்வுகளை நாங்கள் வரவேற்கிறோம். வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வு கொண்ட ஆய்வுகள் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த மிகவும் அவசியமானவை என கனடிய பொலிஸ் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு, கனடாவின் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசுக்கு தெளிவான விளக்கத்தை வழங்கும் முக்கிய முயற்சியாக நோக்கப்படுகின்றது.