இளம் பெண்கள் இருவர் தொடர்பில் பொதுமக்கள் உதவியை நாடும் கனடா பொலிஸ்
கல்கரி பகுதியில் இருந்து மாயமான இரு இளம் பெண்கள் தொடர்பில் பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மாயமான குறித்த இரு இளம் பெண்களும் ஒன்றாக திட்டமிட்டு மாயமானதாக கூட இருக்கலாம் என்றே பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 3ம் திகதி 13 வயதேயான Starla Rider Rabbit என்பவர் வடகிழக்கு 16 அவென்யூ பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அதே வேளை Saddleridge பகுதியில் இருந்து 16 வயதேயான Shakira Bearspaw என்பவர் செப்டம்பர் 16ம் திகதி மாயமானார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த இளம் பெண்கள் விவகாரத்தில் சதி திட்டம் ஏதும் இருப்பதாக கருதவில்லை என பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அம்பர் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு தீவிரமான விவகாரம் இதுவென கருதவில்லை எனவும், ஆனால் மிகுந்த அக்கறையுடன் இந்த வழக்கை விசாரித்து வருவதாகவும் கல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இரு இளம் பெண்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.