கனடாவில் கணவர் தொடர்பில் 3 பிள்ளைகளின் தாயார் முன்வைத்த கோரிக்கை

Arbin
Report this article
ஒன்ராறியோவில் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்ப தாயார் ஒருவர் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறார்.
ஒன்ராறியோவின் Arnprior பகுதியில் மே 13ம் திகதி 32 வயதான Franck Nana Ngassa சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
கட்டுப்பாட்டை இழந்த அவரது காரானது விபத்தில் சிக்கியதாலையே Franck Nana Ngassa படுகாயமடைந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார். தற்போது அவரது சடலத்தை கேமரூன் நாட்டில் உள்ள சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்க குடும்பத்தினர் முயன்று வருகின்றனர்.
அங்கே அவருக்கு உள்ளூர் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யவே அவரது மனைவியும் மூன்று பிள்ளைகளின் தாயாரான Josie Pichette-ம் விரும்புகிறார்.
இதற்காக சுமார் 19,000 டொலர் தேவைப்படும் என்பதால், தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும், சொந்த கிராமத்தில் உள்ளூர் சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தமது கணவரின் இறுதி ஆசையாகவும் இருந்தது என Josie Pichette கூறியுள்ளார்.