செனகல் ராஜதந்திரி ஒருவர் கைது
செனகல் நாட்டின் கனடாவிற்கான முக்கிய ராஜதந்திரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவிற்கான சிலைகள் தூதரகத்தின் கொன்சியூலர் அதிகாரியான கால்சோம் ஸால் (Kalsoum Sall)என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அதிகாரி கியூபெக் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வீட்டு உரிமையாளர் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டின் உரிமையாளருக்கு சுமார் 45 ஆயிரம் டாலர்கள் நட்டத்தை ஏற்படுத்தியதாக செனகல்ராஜதந்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் குறித்த ராஜதந்திரி அந்த வீட்டில் தங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் கட்டமைப்பை சேதப் படுத்தியதாகவும் வீட்டின் தளபாடங்களை சேதப் படுத்தியதாகவும் குறித்த ராஜதந்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்த குற்ற செயல்களுக்காக சுமார் 50,000 டாலர்கள் வரையில் குறித்த ராஜதந்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது