முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Donald Trump Joe Biden United States of America
By Sulokshi Jun 10, 2022 09:14 AM GMT
Report

  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  (Donald Trump)  சதிப்புரட்சியில் ஈடுபட முயற்சித்ததாக அவர்மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் டிரம்ப் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஏற்றுக்கொள்ள மறுத்தார். தேர்தல் பெறுபேறுகளை சம்பிரதாயமாக அறிவிக்கும் நடவடிக்கை 2020 ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்றபோது, ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இவ்வன்முறைகளை தடுப்பதற்குப் பதிலாக, வன்முறையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ட்ரம்ப்  (Donald Trump) செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வன்முறைகள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தெரிவுக்குழு, விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணைகளின் போது ட்ரம்பின் (Donald Trump)  நெருங்கிய தரப்புகள் அளித்த வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று வெளியிட ஆரம்பித்துள்ளது. அதில் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறுவது தவறு என தான் பல தடவைகள் அவரிடம் தெரிவித்தாக முன்னாள் சட்ட மா அதிபர் பில் பார் அளித்த வாக்குமூலமும் ஒளிபரப்பப்பட்டது.

அத்துடன் தனது தந்தை கருத்தை பில் பார் மறுத்ததை தான் ஏற்றுக்கொண்டதாக ட்ரம்பின் (Donald Trump) மகள் இவன்கா ட்ரம்ப் ( Ivanka)அளித்த வாக்குமூலமும் ஒளிபரப்பப்பட்டது. விசாரணைக்குழுவின் உப தலைவரான ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லிஸ் சென்னி, கூறுகையில், வன்முறைக் கும்பலை ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பித்தார்.

அக்கும்பலை திரளச் செய்தார். தாக்குதலுக்கான தீயை பற்றவைத்தார்’ என்றார். ஜனநாயகக் கட்சி அங்கத்தவரான பென்னி தொம்சன் கூறுகையில், ஜனவரி 6 ஆம் திகதி சம்பவங்கள், ஒரு புரட்சியின் உச்சகட்டமாகும்.

அவ்வன்முறை ஒரு விபத்து அல்ல என்றும் அவர் கூறினார். ‘நாடாளுமன்றத்துக்கு அணி வகுத்துச் சென்று, பைடனுக்கு சம்பிரதாயபூர்வமாக அதிகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைமாற்றும் செயற்பாட்டைத் தடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் ஊக்கப்படுத்தலினால் கலகக்காரர்கள் செயற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.     

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US